Monday, October 09, 2006

தீங்கு

குரங்கொன்று ஒரு நாள்
கூரைமேல் குதித்தது
அங்கிருந்து வேப்பம்மரமேறி
தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி
வீட்டிற்குள்ளும் வந்தாயிற்று
என் பங்கு சோறு உண்டு
காது வரை போர்வையிழுத்து
கதகதப்பாய் உறங்கும்
இப்பொழுது இருதயம் கிழித்து
கறி தின்கிறது
வலிக்கும் என்றறியாததாய் நடித்தபடி

-அனிதா

2 comments:

  1. இயல்பு கவிதை சற்றே பழைய வடிவமாகத் தோன்றுகிறது.

    தீங்கு மிக நன்றாக வந்திருக்கிறது. குரங்கு என்ற படிமம் எனக்குப் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. "வலிக்கும் என்றறியாததாய் நடித்தபடி"
    இந்த ஒரு வரியில் இது கவிதையாகிறது :) வாழ்வில் இப்படி எத்தனை குரங்குகள் என்று யோசிக்க வைத்தது.

    ReplyDelete