Thursday, December 21, 2006

துரோகம்

அகால வேளையின்
நம்பிக்கை திரை கிழித்துக்கொண்டு
ஒரு பொய் பிறக்கிறது
பின் மற்றொன்று
மற்றுமொன்று
பிணவறையின் சவங்களாய்
வரிசையாய் பொய்கள்
குளிர்ந்து
விறைத்து
உணர்வற்று...
சரி நம்புகிறேன்.
இப்பொழுது தள்ளி படு.

9 comments:

  1. Anitha,

    pachaith thurokam ithu thaan illaiyaa.
    nambikkai thakarntha piRaku
    uRavu ethaRku?

    a very good expressive post.

    ReplyDelete
  2. உண்மை முகத்தில் அறைகிறது அனிதா.அருமையான கவிதை.

    ReplyDelete
  3. எளிய வார்த்தைகளில் வாழ்வின் நிதர்சனத்தை சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எல்லாப் பொய்களுமே உங்கள் கவிதையின் முன் தலைகுனிந்து நிற்பது போல் தோன்றுகிறது. ஒரு கவிதையின் முக்கியமான வேலையும் இதுதான் என்று எனக்குப் படுகிறது - வெறும் வார்த்தை ஜாலங்களோ, மாய உலகங்களோ எப்போதும் நம்மை ஈர்ப்பது இல்லை.

    ReplyDelete
  5. அனிதா,

    //பிணவறையின் சவங்களாய்//
    போன்று குறிப்பிட்டு சொல்லும்படியான அம்சங்களுடன், தங்களின் கவிதைக்கான வெளி இயல்பாகவும், பிரம்மாண்டமாயும் தெரிகிறது எனக்கு. தொடர்ந்து முன்னகர்த்துங்கள்.

    நுணுக்கமாக புரிந்து கொள்ளும் வாசகனுக்கு இன்பம் தரக்கூடிய கவிதைகள். :)

    எனக்குப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  6. Anonymous10:53 PM

    அகால வேளையில்
    சாதித்துக் கொள்ள
    சில பொய்களைச்
    சொல்ல வைக்கிறாய்.

    பூரித்துப் போவது போல்
    பாவனைகள் காட்டுகிறாய்.

    பொய்யென்று உனக்குத் தெரியும்
    என்று எனக்கும் தெரியும்.

    எதையோ தேடி எங்கோ அலைகிறோம் இருவரும்.
    மறுநாளில் எழுந்தபின் உனக்கு அந்தக் கவிதை கிடைத்தது.
    எனக்கு இது.

    ReplyDelete
  7. பெரிய பெரிய கவிஞரின் வரிகளைப் போல. நல்ல கவிதை அனு.

    விரைவில் புகழ் பெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. Anonymous12:24 PM

    இப்பொழுது தள்ளி படு


    intha varthaikal sollum valimai neengal therinthu use pani irukeengla ilayanu theriyal but real lifela ithu sathiyam illa.

    u shuld obey u shuld be in masters hand.

    kavithaiku nala irukku vaaztthukal

    ReplyDelete