Thursday, August 16, 2007

என் பிரிய வழிபோக்கனுக்கு

இன்னும் நேரமிருக்கிறது
காதலோ காமமோ கவிதையோ
எது தோன்றினாலும் பேசு.

கனவுகள் நெய்வதும்,உயிர் உருக காத்திருப்பதும்
இதயம் பரிமாறுவதும்
இன்ன பிற வசனங்களையும்
பொறுமையாய் கேட்டுக்கொள்கிறேன்.

நெடு நாள் சலிக்காமலிருக்கும்படியாய்
கவனமாய் நினைவுகள் சேகரித்துவை
பிரிவுகள் பற்றிபேசாது இருள் கவியும் வரை
என் விரல்பின்னி தோள்சாய்ந்துக்கொண்டிரு.

என் ரயில் வரும் வேளை
தடயங்கள் துடைத்தெடுத்துக்கொண்டு
நகர்ந்துவிடு.

5 comments:

  1. //என் ரயில் வரும் வேளை
    தடயங்கள் துடைத்தெடுத்துக்கொண்டு
    நகர்ந்துவிடு. //

    நல்ல கவிதை.நன்றி

    ReplyDelete
  2. //என் ரயில் வரும் வேளை
    தடயங்கள் துடைத்தெடுத்துக்கொண்டு
    நகர்ந்துவிடு. //
    நல்ல வரிகள் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எல்லோருக்கும் இப்படித்தானோ??

    ReplyDelete
  4. நல்ல விவரமான கவிதை :)

    ReplyDelete
  5. கவிதை நன்று!!!
    நன்றி.

    ReplyDelete