Wednesday, November 14, 2007

எண்ணங்கள்

ஒன்பது மணி அலுவலக வாகனத்தில்
திணிக்கப்பட்ட ஆண் வாடையில்
ஐந்தாவதாய் ஒட்டிக்கொள்ள நான்.

இந்த அரைமணியில்
இருண்ட பனிகாற்றை சுவாசித்தபடி பயணிக்கலாம்
பிடித்த பாடலொன்றை முணுமுணுக்கலாம்
கிழித்தபடி பின்னகரும் கடைதெருவுக்காய் மிர‌ளலாம்

யாரோ பேசும் செல்போனின்
ம‌றுமுனை குரலை உற்று கேட்க‌லாம்
முடிந்துவிட்ட‌ காத‌ல்க‌ளை வெறுமே அசைபோட‌லாம்

இருந்தும்
உண‌ர்வ‌ற்ற‌ தொடை உர‌ச‌லை பொருட்ப‌டுத்திய‌வ‌ள்போல்
என் இருத்த‌லை
வேண்டுமென்றே அசெள‌க‌ரிய‌மாக்கிக் கொள்கிறேன்

ம‌ற்ற‌ மூவ‌ரின் சுவார‌ஸ்யத்திற்காக‌வேனும்.

- அனிதா

நன்றி : புதிய பார்வை

5 comments:

  1. வாழ்த்துக்கள் ., மென்மேலும் வளர‌

    ReplyDelete
  2. Anonymous3:43 PM

    vow

    ReplyDelete
  3. //ம‌ற்ற‌ மூவ‌ரின் சுவார‌ஸ்யத்திற்காக‌வேனும்.//

    miguntha arththam pothinth avari...
    arumaiyaana iyalpaana variyamaippu...

    vaazhththukkal!!!

    ReplyDelete
  4. மிக ஆச்சரியமான,அழகான கற்பனைத்திறனூம் சொல்லாடலும் உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

    வாழ்த்துக்கள் சகோதரி.
    தொடர்ந்து எழுதுங்கள் !

    ReplyDelete
  5. வார்த்தகள் தாண்டிய எதேனுமொன்றை
    வசப்படுத்துகிறபோதெல்லாம்
    மறைந்துவிடுகிரது
    உங்கள் வரிகள்

    ReplyDelete