முக்கு முக்கு முக்கு முக்கு என்ற
ஆறேழு குரல்கள்
கரைந்துவிட்டிருக்கின்றன
மங்கலாய் நினைவிலிருக்கிறது
தொப்புள் கொடி வெட்டியவள் முகம்
அத்தனை பேர் பார்க்க
அகல விரிந்த கால்கள்
குறுகி கிடக்கின்றன
வயிறு அழுத்தி பிழிந்து
வெளியேற்றியது போக
மீதி ரத்தம்
தொடைகளின் நடுவே வழிகிறது
விடியற்காலையின் இயல்பான உறக்க கலக்கத்தில்
ஓய்வெடுக்க தனியே விடபட்டிருப்பது தெரிந்தும்
வெறும் காற்றில் மெல்ல கேட்கிறேன்
இன்னிக்கு என்ன தேதி
என்று.
wow !!!
ReplyDeletekavithai romba nalla irukku.. it made me to imaging and feel the situation. keep writing
ReplyDeletenijathin azhutham ovvoru vaarthaiyilum.....
ReplyDeleteadi vayitril oru nurai velicham unargiren....
priya- rjn radhamanalan
நல்ல கவிதை, அனுபவித்து எழுதியது போல் உள்ளதே! :)
ReplyDeleteஅருமையான உணர்வைப் பதிவு செய்திருக்கிறீர்கள், தாய்மையை, அம்மா கூடவேயிருப்பதால் அம்மாவைப் பற்றி அதிக சிந்தனைகள் இருப்பதில்லை, இந்தக் கவிதையில் நான் பிறந்த கணத்தின் என் அம்மாவின் மனநிலையை உணர்கிறேன்
ReplyDeleteபெண்மை மட்டுமே உணரும் அனுபவம். ஆண்மையும் உணரும்படி எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
//ஓய்வெடுக்க தனியே விடபட்டிருப்பது தெரிந்தும்
ReplyDeleteவெறும் காற்றில் மெல்ல கேட்கிறேன்//
மி்கவும் உணர்வுப்பூர்வமா இருக்கு
very well.
ReplyDeleteஆண்களுக்கு அவசியப்படற கவிதை இது.பிரசவம்னா வலின்னு ஒரு வரிதான் தெரியும்ங்கிற ஆண்களுக்கு உணர்த்திருக்குது இக் கவிதை.
அருமையான கவிதை கரு...
ReplyDeleteபிரமாதம்
ReplyDeleteAnitha
ReplyDeletevery nice...