Wednesday, November 11, 2009

நான் மட்டும்

திருமாங்கல்யதாரணம் முடியும்வரை
அணையாமல் பாதுகாக்கவேண்டுமென எச்சரித்தபடி
காமாட்சி விளக்கை
கையில் கொடுத்தார்கள்

திரி நுனி வெளிச்சத்தையே
கூர்ந்தபடியிருக்கிறேன்
எல்லா புகைப்படங்களிலும்.

15 comments:

  1. மிக அருமையான கவிதை

    ReplyDelete
  2. மோட்டார் சுந்தரம் பிள்ளை8:42 PM

    புகைப்படங்கள் அழகாகயிருக்கும் உங்கள் கவிதையைப்போல :)

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாயிருக்கு

    ReplyDelete
  4. இயல்பாய் நடக்கக்கூடிய விஷயங்களைக் கவிதையாய்ச்
    சொல்லக்கூடிய கலை சிலருக்கு
    மட்டுமே உண்டு!

    கவிதை அருமை!

    அது சரி, நீங்களும் பெங்களூரா?!

    -கேயார்

    ReplyDelete
  5. கவிதை நல்லா இருக்குங்க அனிதா.

    ReplyDelete
  6. அருமையானக் கவிதை.

    ReplyDelete
  7. அக்கறை அல்லது பயம் அல்லது இரண்டும் கலந்த கலவை.

    ReplyDelete
  8. Anonymous2:48 PM

    எதார்த்தமான கவிதை.

    ReplyDelete
  9. கி.சார்லஸ்2:53 PM

    எதார்த்தமான கவிதை.

    ReplyDelete
  10. சுருக்க‌மாவும் அழகாவும் சொன்ன‌து ந‌ல்லாயிருக்கு.

    ReplyDelete