
ஊரே புரண்டுகிடக்கிறது
ஆங்காங்கே வாகனங்கள் எரிகின்றன
தொலைகாட்சியில்
அவர் திரைப்படங்கள் மட்டுமே
ஒளிபரப்புகிறார்கள்
கடைகளின் மேல் கல்லெறிகிறார்கள்
பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாயிற்று
துக்கம் அனுஷ்டித்தபடி
அலுவலகம் செல்ல வேண்டி
வாகனத்தின் கைப்பிடியில் கட்ட
ஒரு கறுப்பு காலுறையை
தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைத்தப்பாடில்லை.
good one :) எறிகின்றன
ReplyDeletechina ri varumoo
நன்று..
ReplyDelete/வாகனங்கள் எறிகின்றன/
ReplyDeleteஎரிகின்றன?
கவிதை பிடித்திருக்கிறது. சொல்ல மறந்து போனது :)
ReplyDeleteநிதர்சனமான உண்மை
ReplyDeletegood one ...
ReplyDeleteஎறிகின்றன ?
ReplyDeleteஎரிகின்றன.. மாற்றிவிட்டேன். :) நண்பர்களுக்கு நன்றி.
ReplyDeleteதுக்கத்திலும் தூக்கத்திலும் கவிதையா..
ReplyDeleteநிதர்சனம் அனிதா.
அட வெளிப்பாடு நல்லா இருக்கே
ReplyDeleteரசிகனுங்க யாரும் ப்ளாக் படிக்க மாட்டாங்கன்ற தைரியமா?
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..
ReplyDeleteகூகிள் எர்த் மூலமா தெளிவா படம் பிடிச்சு இந்த மாதிரி அசம்பாவிதம் செயுரவங்களை பிடிச்சு பத்து வருஷம் உள்ள போட்டா எல்லாம் சரியாயிடும்.
ReplyDeleteநன்றி சூர்யா..
ReplyDeleteநன்றி நந்தா..
நன்றி ரவி..
அண்ணாமலையான்.. இப்போ வரைக்கும் எந்த தாக்குதலும் நடத்தலை.. :)
சரண்.. ஐ ஜி கார் மேலயே நேருக்கு நேரா நின்னு கல் அடிக்கறாங்க.. கூகள் எர்த் என்ன செய்யும் பாவம்..
யதார்த்தமான வரிகள்...
ReplyDeleteநன்றி
டைமிங்கா கவிதையா!! ரொம்ப நல்லா இருக்கு.. :)
ReplyDeleteரொம்ப நேர்த்தியான வரிகள்
ReplyDeleteஉங்களின் எல்லா கவிதைகளும் மிக ஆழமாகவும் அழகாகவும் உள்ளது...வாழ்த்துக்கள்...
ReplyDelete