Tuesday, February 13, 2007

ஒற்றை ரோஜா...

விடுதி அறையை சுத்தம் செய்கையில்
இரும்பு பீரோ இடுக்கிலிருந்து
பூந்துடைப்பத்தில் ஒட்டிக்கொண்டு வந்தது
நீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்
கறுத்துவிட்டிருந்த ஒற்றை ரோஜா.

எனக்குமுன் இருந்தவரோ
அதற்குமுன் இருந்தவரோ
யாருடைய‌தாக‌வும் இருக்க‌லாம்.

ம‌ற‌ந்த‌தா ம‌றுத்த‌தா எனத் தெரியாத‌ ப‌ட்ச‌த்தில்
ம‌ட‌ல்வில‌க்கி தூசு அக‌ற்றி சுவ‌ரில் ஒட்டிவிட்டேன்.

கொடுத்த‌வ‌ரும் பெற்ற‌வ‌ரும்
இன்னும் பிரியாம‌ல் இருக்க‌வும் கூடும்.

- அனிதா

நன்றி : ஆனந்த விகடன்

9 comments:

  1. Anonymous7:25 PM

    மெல்லிய உணர்வுகளுடன் நல்ல பதிவு அனிதா.

    உங்கள் blogல் பெரும்பாலும் சோகத்தை/வெறுமையை வெளிப்படுத்தும் கவிதைகளையே பார்த்த எனக்கு, இது கொஞ்சம் மாறுதலாக இருக்கின்றது

    ReplyDelete
  2. எளிமையான கவிதை, ஆனால் நிறைய யோசிக்க வைத்தது. "மறந்ததா, மறுத்ததா" என்பதில் நிறைய combination வருகிறது. கொடுக்க நினைத்து முடியாமல் பின் மறந்திருக்கலாம், கொடுத்து வாங்க மறுத்ததால் வெறுத்து பின் மறந்திருக்கலாம், வாங்கிக் கொண்டு பின்னொரு சூழ்நிலையில் அந்த காதலை மறுத்திருக்கலாம், அல்லது - a good one- ஒரு அழகான காதல் நினைவுச்சின்னத்தை எத்தேச்சையாக தவறவிட்டிருக்கலாம், அவர்கள் இன்னும் பிரியாமலும் இருக்கலாம் !!
    அந்த positive note-ல் ரோஜாவை பத்திரப்படுத்துவது, காதல் மேல் இன்னும் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. I enjoyed reading this, esp on Feb 14th :))

    ReplyDelete
  3. kaathalukku mariyathai.. thelivana kannottam

    ReplyDelete
  4. நல்ல கவிதை அனி. ரோஜாவின் மவுசே தனிதான். தெரியாமலே நேருமாமா பாக்கெட்டில் வெச்சிருந்தார்!!!!

    ReplyDelete
  5. அருமையான ரோஜா அனிதா
    என்னிடமும் சில ரோஜா இதழ்கள் இப்படி பதிவாக இருக்கின்றன :)
    சிவா @ ச்ரிஷிவ்

    ReplyDelete
  6. அய்..பழையரோஜாவிலிருந்து ஒரு புதுக்கவிதை.. நன்றாக இருக்கின்றது..

    விருப்பத்துடன் கொடுத்தவரை
    அலட்சியம் செய்து
    வாங்கியவர் வீசியிருக்கவும் கூடும்...

    அல்லது

    கொடுக்க வேண்டுமென்ற கனவிலையே
    கொடுக்காமல் விட்டிருக்கவும் கூடும்

    ReplyDelete
  7. திடீரென்று இன்றுக் காலை, எப்படியோ இந்தப் பக்கத்தைப் பார்க்க நேர்ந்து விட்டது. ஓரிரென்று கவிதை ஏற்க்கெனவே தமிழ்க் கவிதைகளுக்கான் ஆர்குட்த் தளத்தில் படித்திருந்ததாலும்,

    வேலைகளின் தவம் களைத்து இடையிடையே
    வாசலிட்ட கோலம் பார்க்க
    ஓலமின்றி ஓடிவரும்
    சிறுமியைப் போல்
    ஓடிவந்து பார்ப்பவனாய் நான்!

    இதோ வந்ததிற்கு அடையாளமாய் உன் பிள்ளைகளில் ஒன்றுக்கு திலகமிட்டுச் செல்கிறேன்.
    எண்ணிரண்டு மாதமாய் நீ
    பிரசிவிக்காதது எண்னி வியந்தவனாய்.
    -தாவனி

    ReplyDelete
  8. Anonymous9:02 AM

    சில வரிகள் ஆனால்.. நிறைய சிந்திக்க வைத்து...

    கால்களினுள் ரோஜாக்களை போட்டு மிதிக்கும் இந்தக்காலத்தில், நீங்கள் வாடிய ரோஜாவுக்கும் வாழ்வு கொடுத்தது ஹார்ட்டை டச் அப் செய்துவிட்டது...

    நன்றி!

    ReplyDelete
  9. இந்த வார விகடனில் உங்கள் கவிதைகள் பார்த்தேன்.வாழ்த்துக்கள் அனிதா !!

    ReplyDelete