Monday, March 05, 2007

ஒன்பது மணி அலுவலக வாகனத்தில்
திணிக்கப்பட்ட ஆண் வாடையில்
ஐந்தாவதாய் ஒட்டிக்கொள்ள நான்.

இந்த அரைமணியில்
இருண்ட பனிகாற்றை சுவாசித்தபடி பயணிக்கலாம்
பிடித்த பாடலொன்றை முணுமுணுக்கலாம்
கிழித்தபடி பின்னகரும் கடைதெருவுக்காய் மிர‌ளலாம்

யாரோ பேசும் செல்போனின்
ம‌றுமுனை குரலை உற்று கேட்க‌லாம்
முடிந்துவிட்ட‌ காத‌ல்க‌ளை வெறுமே அசைபோட‌லாம்

இருந்தும்
உண‌ர்வ‌ற்ற‌ தொடை உர‌ச‌லை பொருட்ப‌டுத்திய‌வ‌ள்போல்
என் இருத்த‌லை
வேண்டுமென்றே அசௌக‌ரிய‌மாக்கிக் கொள்கிறேன்

ம‌ற்ற‌ மூவ‌ரின் சுவார‌ஸ்யத்திற்காக‌வேனும்.

2 comments:

  1. இப்ப தான் சக்தி ரீடரில் உங்கள் பதிவுகளை முதல்முதலாகப் படித்து, அதுவும் இந்த கவிதையால் மிகக் கவரப்பட்டேன். நல்லா எழுதறீங்க. (வெறும் காதல் கவிதைகள் எனக்கு ஒவ்வாமை:-) பெண்ணுணர்வுகளை தெளிவா எழுதறீங்க. வாழ்த்துக்கள்.

    இன்னும் உங்கள் மத்த பதிவுகளையும் படிச்சுக்கறேன்.

    ReplyDelete
  2. That's a good one..
    A lot of psycology involved in this..
    I have added it to ப‌டித்தது / பிடித்தது series in my site:
    http://www.writercsk.com/2009/05/44.html

    ReplyDelete