Thursday, July 17, 2008

கதவு

கதவுகள் சூழ்ந்த அறையின் இருள் நீக்கி
பாதி திறந்திருக்கிறது ஒரு கதவு.

மயக்கம் தெளிந்தும்
கட்டப்பட்ட கைகளின் இறுக்கம் தளர்த்துவது
அத்தனை எளிதாய் இல்லை.

பாதி திறந்த கதவு வழி
உள்ளே வருகின்றன
பரிச்சயமற்ற குரல்கள்
தொடர்ந்து வீசுகிறது சாராய வாடை
எப்பொழுதுக்குமான இயலாமையில் அழைக்கின்றன
பிரியத்தின் குரல்கள்
அவ்வப்போது வரும் காற்று
தப்பித்தலுக்கான ஏக்கங்களை கூட்டிப்போகிறது

பாதி திறந்த கதவுகள் சுவாரஸ்யமானவை.
அவ்வளவே.

மூடிய கதவுகள் மூடியே இருக்கின்றன
எப்பொழுதுக்குமான உண்மைகளுடன்.

12 comments:

  1. அனிதா,

    நல்ல கவிதை. எளிமையான ஒரு கவிதை யோசிக்க யோசிக்க தரும் அர்த்தங்கள் சுவாரசியமானவை.

    ஒரே வார்த்தையை திரும்பவும் (அதே கவிதையில் :)) பயன்படுத்துவதை முடிந்தால் தவிர்க்கலாம் - இக்கவிதையில் /*எப்பொழுதுக்குமான*/ என்ற வார்த்தை.

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகளை ஒரு நான்கைந்து முறை படித்த பின்பே எனக்கு புரியும் அல்லது புரிந்தது போல இருக்கும்..

    இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..

    தப்பிக்க வேண்டிய நேரத்திலும் "பாதி திறந்த கதவுகள் சுவாரஸ்யமானவை." என்று சொல்லும் இக்கவிதை மிக வித்தியாசமாய் இருக்கு..

    "அவ்வப்போது வரும் காற்று
    தப்பித்தலுக்கான ஏக்கங்களை கூட்டிப்போகிறது"
    இந்த வரிகள் வருத்தத்தையும்

    "மூடிய கதவுகள் மூடியே இருக்கின்றன
    எப்பொழுதுக்குமான உண்மைகளுடன்."
    இந்த வரிகள் திகிலையும் தருகின்றன..

    அடிக்கடி கவிதை எழுதி பதிவிலிடுங்கள்..

    ReplyDelete
  3. Anonymous12:57 PM

    ///பாதி திறந்த கதவுகள் சுவாரஸ்யமானவை.
    அவ்வளவே.///

    ஜூப்பர்...

    நல்ல கவுஜ...!!!

    ரசித்தேன்...

    பின்னூட்டம் வரலைன்னு கவலைப்படாம நிறைய எழுதவும்...

    ReplyDelete
  4. என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு..

    சூர்யா
    சென்னை
    butterflysurya@gmail.com

    ReplyDelete
  6. இப்போதுதான் உங்கள் கவிதைகளை படிக்க முடிந்த்தது என்பது
    மிகவும் வருத்தப்பட வைக்கிறது

    காலம் கடந்து வீசுகிற காற்றூ
    சில தலைகீழ் மாற்றங்களை
    கொய்து போகும்
    எப்போதும் போல் அல்லாமல்

    பதிந்து கிடந்த அதன் சுவடுகளின்
    ரத்தவாடைகளில் ஊரும் எறும்புகளுக்கு யார் சொல்ல முடியும்
    சுவைகளின் அரும்புகள் பற்றிய
    வகுப்பை





    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சமீபத்தில் படித்தவைகளில்
    சுவாரசீயமானது.

    வரிகளனைத்தையும் பலமுறை படித்துவிட்டேன்.
    நிறைய‌ எழுதுங்க‌ ப்ளீஸ்.

    ReplyDelete
  8. ரொம்ப நாள் ஆச்சே.. கவிதை பதிவு போட்டு..??

    ReplyDelete
  9. ரொம்ப பிசியா இருக்கீங்க போல..


    இருந்தாலும் ஒரு நல்ல கவிதையை போஸ்ட் பண்ணுங்க ப்ளீஸ்..
    :)

    ReplyDelete
  10. ஒரு மாதம் ஆகிவிட்டது..

    ஒரு நல்ல கவிதையை போஸ்ட் பண்ணுங்க..
    :)

    ReplyDelete
  11. Anonymous9:15 PM

    மூடிய கதவுகள் மூடியே இருக்கின்றன
    எப்பொழுதுக்குமான உண்மைகளுடன்.
    nalla varigal....

    ReplyDelete
  12. அன்பு மிக அனிதாவிற்கு..

    நீங்கள் எவ்வித சூழலில் இருக்கிறீர் என்று தெரியவில்லை. மிகுந்த பனி சுமையில் கூட நீங்கள் இருக்க கூடும்..

    நேரம் கெட்ட நேரம், தவறான தருணம், என ஏதோ ஒரு கணத்தில் இதை நீங்கள் படிக்க கூடும்.. வெறுப்படைய கூடும்..

    ஆனால். தினம் தினம் உங்கள் வலைப்பக்கம் வந்து புதிய பதிவை தேடுவது என் வாடிக்கையாகிவிட்டது..
    :(

    ReplyDelete