ரயிலில் ஏறியதுமே குதூகலிக்கிறாள் குழந்தை
தொண்டைக்குள் நீர் தேக்கி
கர்ர்ர் என்று சப்தமிடுகிறாள்
நொடி நேரமும் கையில் அடங்காமல்
இங்கும் அங்கும் தாவ முயல்கிறாள்
இல்லாத யாரையோ கண்ணாடி ஜன்னல் வழியே
சலிக்காமல் அழைக்கிறாள்
கடந்து செல்பவர்கள் புன்னகைத்துப் போகிறார்கள்
சிலர் எட்டி கன்னம் கிள்ளுகிறார்கள்
சிரித்துவிட்டு பதில் சிரிப்புக்காய் காத்திருக்கிறார்கள்
அடக்கவியலா பெருமிதத்தோடு
ரயிலின் தாளம் பழகியவளாய்
குழந்தைக்கு ஆடை மாற்றி பால் புகட்டி
அவளுக்குள்ளேயே மூழ்கியிருக்கிறேன்
இவ்வளவு சலனங்களுக்கும் சற்றும் நிமிறாமல்
புத்தகம் படிக்கிறாள்
எதிர் இருக்கையில் இருப்பவள்
என் கவன ஈர்ப்பு செய்கைகளெல்லாம்
குழந்தையை தாண்டி அவளுக்காய்
மாறத்துவங்கிய நிமிடத்திலிருந்து
புத்தகங்களுக்குள் ஊறிக்கொண்டிருந்த நாட்களில் ரசித்த
குழந்தைகளின் முகங்களை நினைவுகூற முயன்றுக்கொண்டிருக்கிறேன்
இந்த நிமிடம் வரை.
”என் கவன ஈர்ப்பு செய்கைகளெல்லாம்
ReplyDeleteகுழந்தையை தாண்டி அவளுக்காய்
மாறத்துவங்கிய நிமிடத்திலிருந்து
புத்தகங்களுக்குள் ஊறிக்கொண்டிருந்த நாட்களில் ரசித்த
குழந்தைகளின் முகங்களை நினைவுகூற முயன்றுக்கொண்டிருக்கிறேன்”
இந்த கவிதை நல்லா வந்திருக்குங்க,
குழந்தையின் ஆர்வமும் , அம்மாவின் ஏமாற்றமும்னு
பின்னோக்கி இழுபடுகிறது மனமும்
:))
ReplyDelete//இல்லாத யாரையோ கண்ணாடி ஜன்னல் வழியே
ReplyDeleteசலிக்காமல் அழைக்கிறாள்//
அழகு!
சில வேளைகளில் அனுதாபத்தையும் (பாவம் எப்படி கத்திக்கிட்டே இருக்கு பாப்பான்னு) சில வேளைகளில் ஆர்வத்தையும் கிளறும் குழந்தைகளின் இச்செயல்! :)
//புத்தகங்களுக்குள் ஊறிக்கொண்டிருந்த நாட்களில் ரசித்த
ReplyDeleteகுழந்தைகளின் முகங்களை நினைவுகூற முயன்றுக்கொண்டிருக்கிறேன்///
ரசிக்க மறந்த தருணங்கள்!!
மழலைன்னாலே அழகு உங்க கவிதையும் அழகு அனிதா
ReplyDeleteபுத்தகங்களுக்குள் புதைந்து கிடந்த நாட்கள் எல்லாம் இன்று யோசிக்கையில் சில நேரம் அபத்தமாகவே தோன்றுகிறது. கையில் குழந்தைவேறு இருந்தால் கேட்க வேண்டுமா? :)
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க இந்த உணர்வு.
ReplyDeletea good one.
ReplyDeleteஅழகு!
ReplyDeleteNice one.
ReplyDeletekavithaikal supper
ReplyDelete