இதழ்கள்
கொஞ்சம் கவிதைகள்,நிறைய கனவுகள்
Wednesday, November 11, 2009
நான் மட்டும்
திருமாங்கல்யதாரணம் முடியும்வரை
அணையாமல் பாதுகாக்கவேண்டுமென எச்சரித்தபடி
காமாட்சி விளக்கை
கையில் கொடுத்தார்கள்
திரி நுனி வெளிச்சத்தையே
கூர்ந்தபடியிருக்கிறேன்
எல்லா புகைப்படங்களிலும்.
‹
›
Home
View web version