Thursday, June 15, 2006

கற்பு...



இரவு நேர பேருந்து பயணத்தின்
அரை உறக்கத்தினூடே...
ரகசியமாய் இடை வருடும்
பின் இருக்கை மிருகம்...

காமமும் கோபமும்
ஒருசேர கிளர்ந்தெழ,

வருடலின் சுகம் மீறியும்
"பளாரென" அறைகிறேன்...

என் வருகையை
எதிர்நோக்கி
தலையணை கட்டித்தூங்கும்-

கணவன் முகம் நினைத்து...

-அனிதா

9 comments:

FunScribbler said...

good one anitha! ur blog is interesting. continue blogging!

Selva said...

rombave practical ah ezhuthi irukkenga.. keep up the good work..

Anonymous said...

Karpukku ippadi kooda oru vilakkam solla mudium.

nalla irukku.

Ken said...

மிக நிதர்சனமான போலித்தனமற்ற வரிகள் இதே கருத்துள்ள கவிதையொன்று உண்டு என்றாலும் வாழ்த்துக்கள்

"காமமும் கோபமும்
ஒருசேர கிளர்ந்தெழ,
வருடலின் சுகம் மீறியும் "

மழைக்காதலன் said...

உங்கள் கவிதையை ஆராய்ச்சி செய்ய நான் தயாரில்லை.. உங்கள் கவிதை உங்கள் குழந்தை போன்றது... நினைத்ததை சொல்லும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது

MSK / Saravana said...

உண்மைகள் தைரியத்தை துணைக்கழைக்கும்.. உங்களிடம் உண்மையும் தைரியமும் இருக்கிறது.

Gokul said...

இந்த கவிதையை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிலவும் பாலியல் வறுமை சூழ்நிலையில் இருந்து பார்த்தால் வேறு அர்த்தம் தெரியும்.
பாலியல் வறுமை என ஒரு சொல் இருப்பது இங்கே எத்தனை பேருக்கு தெரியும்?

Venkata Ramanan S said...

kavithaikku etra poruththamaana thalaippu.. :)

நேசமித்ரன் said...

அற்புதம்
மிக பிடித்தது கவிதையில் இருக்கும் நேர்மை