Monday, May 25, 2009

நிழல்

எதிரி விஷம் கலந்து கொடுத்த
காபியை அருந்திய கதாநாயகி
சுருண்டு விழுகையில் தொடரும் போட்டார்கள்

சோற்றுக் கவளம் வாயிலே இருக்க,
செத்துட்டாளா என்றேன்
சாகமாட்டா நாளைக்கு காப்பாத்திடுவாங்க
என்றாள் அம்மா சாகவாசமாக

பின் மழைக்காற்றையொத்த
குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி
காப்பாற்றபடாத கதாநாயகிகள் குறித்து
யோசிக்கத் துவங்கினேன்

5 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றாக இருக்கிறது கவிதை!

-ப்ரியமுடன்
சேரல்

யாத்ரா said...

அருமையான கவிதைங்க, மிகவும் நேரடியாக அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்

ச.முத்துவேல் said...

ரொம்ப நல்லா இருக்கு.

Anonymous said...

> சாகவாசமாக
Isn't it saavagaasamaaga?

காலம் said...

நல்லருக்கு அனிதா
கதநாயகிகள் பற்றி மட்டுமில்லைதானே