Monday, October 12, 2009

சற்றுமுன் நடந்த விபத்து..

நிகழ்ந்த நொடியில்
வாகனங்கள் தேங்கத்துவங்கிவிட்டன

அடிபட்டவனை சுற்றி
ஆனவரை கூட்டம் சேர்ந்தது

அதிர்வலைகள் பரவி
என்னை வந்து சேர்ந்தபோது
இறந்துவிட்டான் என்றார்கள்

ஆம்புலன்ஸில் ஏற்றும்போது
பரிச்சயமில்லாத ஆடைகளை குறித்துக்கொண்டபின்
கண்ணாடி சில்லுகள் மேல் ஏற்றிய
என் வாகனத்தின் டயர் பழுதாகியிருக்குமோவென

கவலைப்படத் துவங்கினேன்.

6 comments:

மோட்டார் சுந்தரம்பிள்ளை said...

கண்ணாடி சில்லுகள் மேல் ஏற்றிய
என் வாகனத்தின் டயர் பழுதாகியிருக்குமோவென

கவலைப்படத் துவங்கினேன்

நிதர்சனமான வரிகள்

இந்தக்கவிதையின் அழகே அப்படியே காட்சிப்படுத்தியிருக்கும் வரிகளும் உண்மையும்தான்

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்

அருமை

Unknown said...

Good one.

butterfly Surya said...

அருமை.

ராஜா சந்திரசேகர் said...

நம் கெட்டுப் போகாத குழந்தைத்தனமே
கவிதையில் கண்டெடுக்கிறது இது போன்ற சிந்தனையை...

இளந்தமிழன் said...

வேகமாக சுழலும் உலகத்தில் இது நிதர்சனமான உண்மை.