Monday, October 12, 2009

ஒரு மாறுதலுக்காய்..

குழந்தையின் இசைக்கருவியில்
விதம்விதமாய் மிருகங்கள்
பொத்தான்களை அழுத்துகையில்
அதனதன் குரலில் பாடும்

நிறங்களும் சப்தங்களும்
அவள் சின்ன விரல்களை
சலிக்காமல் ஈர்க்கும்

அவள் உறங்கியதும்
பொத்தான் களை ஒவ்வொன்றாய் கழற்றி
மாற்றி மாற்றி பொருத்தினேன்.

மாடு கனைப்பதையும் வாத்து குரைப்பதையும்
பார்க்க பயமாயிருக்கிறது.

8 comments:

கலை said...

இதை முயற்சித்துப் பார்க்க ஒரு நாளேனும் தோன்றவில்லையே :)

நேசமித்ரன் said...

அருமையான சிந்தனை அதை சொல்லி இருக்கும் விதம் அற்புதம்
முகுந்த் நாகராஜன் கவிதைகளைத்தான் இன்றைய இலக்கிய உலகம் குழந்தைகளின் உலகை பேசுவதாய் சொல்லிக் கொண்டிருக்கிறது அதை விட ஒரு படி மேல் என்று தோன்றுகிறது ஆகி மற்றும் ஒரு இரவு இருபத்தியொரு சென்டிமீட்டர் மழை பெய்தது என்ற இரண்டு தொகுப்புகளையும் வாசித்த அனுபவத்தில் சொல்கிறேன்

மீண்டும் வாழ்த்துக்கள்

சென்ஷி said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கவிதை நன்றாக இருக்கிறது தோழி. வித்தியாசமான கரு. தலைக்குள் குறுகுறுக்கும் அனுபவம்.

-ப்ரியமுடன்
சேரல்

அகநாழிகை said...

வித்யாசமான கவிதை. நன்றாயிருக்கிறது.

- பொன்.வாசுதேவன்

உயிரோடை said...

க‌விதை ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து அனிதா. குழும‌த்தில் ப‌கிர்ந்த‌ நேச‌மித்திர‌னுக்கு என் ந‌ன்றிக‌ள்.

-குமாரு said...

நல்ல கற்பனை!!!
நினைத்து பார்த்தால் சிரிப்பு வருகிறது !!!

MSK / Saravana said...

அசாதாரணங்கள் பயமுறுத்துது.
எனக்கும் பயமாத்தான் இருக்கு...