Thursday, November 16, 2006

சுழற்சி...

இது நிகழாதிருக்க வேண்டும்
இம்முறையாவது.
அங்குலம் அங்குலமாய் வெப்பம் பரவி
தீ கனன்று அனல் துவங்கும்
ஐந்து விரல் அனிச்சயாய் மடங்கி
ரேகைக்குள் குழி பறிக்கும்
மரங்கள் மெலிந்து கொடிகளாகி
கொடிகள் வளைந்து நாணலாகும்
வீடு அதிர்ந்து அதிர்ந்து அடங்கும்
தூண்கள் வலுவின்றி சரியத் துவங்கும்
முற்றத்து துளசி மாடம்
சமயம் பார்த்து ஓடி ஒளியும்
எனினும் வீடும் அழியபோவதில்லை
காடும் கருகபோவதில்லை
யாரையும் ஈர்க்கவில்லை எந்த ஒரு நிகழ்வும்
பேருந்து நெரிசலின் சலனம் தாண்டி
சன்னமாய் உதிர்கின்றன
ஒரு குழந்தைக்கான ஆயத்தங்கள்

-அனிதா

2 comments:

Anitha Jayakumar said...

இந்த கவிதையை படித்த நண்பர்கள் எல்லொரும் வெவ்வேறான சுவாரஸ்யமான அர்த்தங்கள் யூகித்தார்கள். படிமங்களை பல விதத்திலும் அர்த்தபடுத்த முடியும் எனினும் பெண்மை சார்ந்த இக்கவிதையை நண்பர்களை விடவும் தோழிகள் எளிதில் புரிந்து ரசித்தது நிறைய மகிழ்ச்சியும் பெரிய அச்சர்யமும் ஏற்படுத்தியது.கவிதையில் படர்ந்திருக்கும் வலி, சலிப்பு, அருவருப்பு அனைத்தும் உணர்ந்து ரசித்து விவாதித்த நண்பர்களுக்கும் தோழியருக்கும் நன்றிகள்.

-ganeshkj said...

முதலில் புரியவில்லை. உங்களுடைய comments படித்த பிறகு மீண்டும் வாசித்த போது புரிந்தது போல் இருந்தது. ஆனால் முழுவதும் புரியவில்லை !! :)