Wednesday, January 10, 2007

கரிசனம்

அனல் தகித்து
எடை கூடிய உடலின்
முறுக்கி பிழியும் வலி பொறுத்து
இல்லாத வெளியில்
என்னுடன் நடந்துக்கொண்டிருந்தேன்
தொலைபேசியின் இரக்கமற்ற‌ சிணுங்கலில்
உலுக்கி எழுப்பி
உறங்குகிறாயா என்கிறாய்.
ஆமாம்.

- அனிதா

நன்றி : ஆனந்த விகடன்

3 comments:

Unknown said...

/என்னுடன் நடந்துகொண்டிருந்தேன் /

அட!

/ஆமாம்/
ஒரு வார்த்தை சொல்லியது அனைத்து வலியும்...

-ganeshkj said...

"இல்லாத வெளியில்
என்னுடன் நடந்து கொண்டிருந்தேன்"

:)))))

இல்லாத வெளியொன்று எங்கோ நிச்சயம் இருக்கிறது. இங்கு நடப்பது ஆறுதல் தருகிறது; அமைதி கிடைக்கிறது; கவிதை பிறக்கிறது; யாரும் புரிந்து கொள்ளாமல் தனிமை அழுத்தும் போது கால்கள் சோர்ந்து விடுகிறது; இன்னொரு கவிதை பிறக்கிறது :)

ப்ரியன் said...

/*தொலைபேசியின் இரக்கமற்ற‌ சிணுங்கலில்
உலுக்கி எழுப்பி
உறங்குகிறாயா என்கிறாய்.
ஆமாம்*/

அருமை அனிதா