Thursday, July 05, 2007

மல்லிப்பூக்களும் நிலக்கடலைகளும்.

முட்டி மோதி ரயில் ஏறுபவர்களில் நானும்.
அவளும்.

அடித்துபிடித்து ஜன்னலோரம் உட்கார்ந்துக்கொண்டேன்.
கசங்கலின்றி அருகில் அமர்ந்தவள்
எனக்கு பிடிக்காத நாவல் படித்தபடி
நிலக்கடலை கொறிக்கிறாள்
பூனைமுடிகளற்ற சிவந்த கன்னங்கள் வலிக்காதபடி.

அசைவதும் ஆடை திருத்துவதும்
இயல்பாய் இல்லாவிடினும்
அழகாய்த்தானிருந்தாள்
நெரிசல் பார்வைகளிலிருந்து ரயிலிறங்கி மறையும்வரை.

என் மல்லிப்பூக்களையும் மருதாணிக் கைகளையும்
விழிவிரிய பார்த்தபடி நிற்கிறது
இதே கூட்டம்
இப்போது.

அவரவர்க்கும் பொழுது கழிந்தபடிதானிருக்கிறது

- 2007 சங்கமம் கவியரங்கத்தில் வாசித்தது.

3 comments:

-ganeshkj said...

:)) ஒரு எளிமையான, interesting-ஆன கவிதை.

"எனக்கு பிடிக்காத நாவல் படித்தபடி", "இயல்பாய் இல்லாவிடினும்", "அழகாய்த்தானிருந்தாள்" - என்பதில் மல்லிகைப்பூவிற்கு நிலக்கடலை மேல் வெகு இயல்பாக ஏற்படும் பொறாமை தொனி தெரிகிறது :)

கொடுத்து வைத்த கூட்டம் தான் :)))

cm chap said...

Beautiful...

ப்ரியன் said...

Nice One Anitha.