மயில் போன்ற
அட்டை ஜோடனையின் நடுவே
அமர்ந்திருக்கிறாள் சிறுமி.
முகம் மலர்ந்து
வெட்கி ஏற்றுக்கொள்கிறாள்
மாய்ந்து மாய்ந்து செய்யபடும் அலங்காரங்களையும்
சூட்டப்படும் மலர்களையும்.
குவியும் பரிசுகளை பிரிக்கும் ஆவலில்
பந்தி முடிந்து தாம்பூலம் நிறைந்து
விடைபெறும் கூட்டத்தை
கையசைத்து வழியனுப்புவாள்.
பாவடையில் கரைபடாமல்
பள்ளிக்கு போய்வர
இன்னும் நாளாகலாம்.
-அனிதா
2 comments:
இந்த கவிதைக்கு என்ன மறுமொழியிடவேண்டுமென்று எனக்கு தெரியலங்க..
ஆனா நல்லா இருக்குங்க.. வித்தியாசமான அணுகுமுறை என்பதை மட்டும் சொல்ல முடியும்.
அருமையான கவிதை... இந்த கவிதை மட்டும்தான் முதல்முறை வாசித்தபோதே புரிந்தது...
Post a Comment