Monday, May 25, 2009

சூப்பர் டான்ஸர்

எனக்கு பிடித்த போட்டியாளன் இன்று
வெளியேற்றப் படுகிறான்.
அசைவுகள் சரியாக அமையவில்லையாம்

பார்வையாளர்கள் வரிசையில் அவன் மனைவி
விசும்பிக்கொண்டிருக்கிறாள்
நடுவர்கள் செய்வதற்கேதுமின்றி தலை குனிகிறார்கள்
இன்று கருப்பு தினம் என்கிறாள்
தொகுப்பாளினி

வாத்தியங்கள் சோகமிழைக்க
ஸ்லோ மோஷனில் மேடையிலிருந்து இறங்குபவனை
மெல்ல அணைத்து முத்தமிட்டு அனுப்புகிறேன்
என் பங்கிற்கு.

11 comments:

Chandran Rama said...

I really enjoyed your poetry.. very simple but lively narration..I am new to your blog.. great to know that
you have released a book. I will surely read it and get back to you.. meanwhile keep writing .. your poems
carry that extra feel which I dearly admire..

யாத்ரா said...

போட்டி என்ற பெயரில், இந்த ஊடகங்கள் நடத்துகிற அபத்தங்களை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்.
ஏன் இப்படி வெற்றி மட்டுமே பிரதானமாக முன்னிருந்தப்படடு இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடத்துகிறார்களோ,

ஆடல் பாடல் என்பதை அதிகம் விரும்புபவன் என்றாலும் என்னால் இம்மாதிரியான ஆரோக்யமற்ற மெலோ டிராமாத் தனங்களை பொறுக்க முடியவில்லை, இதில் வேறு நீதிபதிகளாக உட்கார்ந்து கொண்டு குத்தங்குறை சொல்லும் அதி புத்திசாலி பிரகஸ்பதிகள்,,,,,

இம்மாதிரி போட்டிகளை விட கிரிக்கெட், கால்பந்து போன்ற போட்டிகளை, அதன் பிரசன்டேஷன் செரிமனிகளை மிகவும் ரசிக்கிறேன், மேலும் இவை ஒரு உருவ அமைதியோடும் இலக்கியத் தரத்தோடும் இருப்பதாகக் கருதுகிறேன்.

தங்கள் கவிதை சூப்பர் டான்சர் போன்றதான நிகழ்ச்சிகளை ரகசியமாய் பகடி செய்திருப்பது மிகப் பிடித்திருக்கிறது.

நேசமித்ரன். said...

it's a knife inside the cream cake

arumai

vaazhthukkal

nesamithran.blogspot.com

ny said...

வணக்கம்..
புத்தகத்திற்கும் பெற்றகத்திற்கும் வாழ்த்துக்கள்!!
ஆவி.. யில் படித்தவற்றின் மீள்வாசிப்பில் ஆனந்தம்..
அப்புறம், இந்தக் கவிதையின் தீவிரம் பற்றவில்லை என்னை... தமிழ் தொலைக்காட்சி கண்டு ஆண்டுகளாகிவிட்டது :))
.............தொடரத் தொடங்குகிறேன்!

நட்புடன் ஜமால் said...

வாழைப்பழமும்

ஊசியுமா

இது.


முதல் வாசிப்பில் விளங்கயில்லை.

இதற்கெல்லாமா கவிதைன்னு நினைச்சு போட்டனன்.

Anitha Jayakumar said...

அனைவருக்கும் நன்றி..

Anonymous said...

I don't understand the implicit msg in this poem.. can anyone explain? pls don't say, if I dont' understand this, I am supposed to study this blog. I am a novice to this kind of writings.

Anitha Jayakumar said...

தமிழ் தொலைகாட்சிகளில் பார்த்த படத்தையே பார்த்து, சிரித்த காமடிக்கே சிரித்து, புதிது புதிதாய் சீரியல்களுக்கு அழுதுக்கொண்டிருக்கும் எக்கசக்கமான சராசரி மனிதர்களுக்கு இது போன்ற ரியாலிடி ஷோக்கள் புது விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.. இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன, உறவாட தூண்டுகின்றன. மற்றதில் பொய்யாய் வாழத் துவங்கிவிட்டதுபோலவே ரியாலிடி ஷோக்களிலும் தங்களை அறியாமல் உட்புகத் துவங்கி இருக்கிறார்கள். அப்படி ஒரு உணர்வையே இந்த கவிதை வெளிபடுத்த முயல்கிறது. நன்றி.

Anonymous said...

Thanks for the explanation. I like the way you choose words to frame a wonder line.. eg- 'nambikkai thirai kilithu kondu poi pirakirathu' from 'Dhurogam'. Such a complex 'nadai' you follow. Anyway.. good. Niraya eluthunga!

Anonymous said...

thanks for such a nice poem keep it up

keep writting more

Vennila

Ramesh said...

Hello Mam.. how r u? Long time no writing...