Wednesday, November 11, 2009

நான் மட்டும்

திருமாங்கல்யதாரணம் முடியும்வரை
அணையாமல் பாதுகாக்கவேண்டுமென எச்சரித்தபடி
காமாட்சி விளக்கை
கையில் கொடுத்தார்கள்

திரி நுனி வெளிச்சத்தையே
கூர்ந்தபடியிருக்கிறேன்
எல்லா புகைப்படங்களிலும்.

15 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

:) அருமை

கல்யாணி சுரேஷ் said...

Nice lines. :)

நேசமித்ரன் said...

மிக அருமையான கவிதை

மோட்டார் சுந்தரம் பிள்ளை said...

புகைப்படங்கள் அழகாகயிருக்கும் உங்கள் கவிதையைப்போல :)

சென்ஷி said...

ரொம்ப நல்லாயிருக்கு

இன்றைய கவிதை said...

இயல்பாய் நடக்கக்கூடிய விஷயங்களைக் கவிதையாய்ச்
சொல்லக்கூடிய கலை சிலருக்கு
மட்டுமே உண்டு!

கவிதை அருமை!

அது சரி, நீங்களும் பெங்களூரா?!

-கேயார்

ராஜா சந்திரசேகர் said...

அழகு அனிதா

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்குங்க அனிதா.

அரங்கப்பெருமாள் said...

அருமையானக் கவிதை.

நட்புடன் ஜமால் said...

அக்கறை அல்லது பயம் அல்லது இரண்டும் கலந்த கலவை.

Anonymous said...

எதார்த்தமான கவிதை.

கி.சார்லஸ் said...

எதார்த்தமான கவிதை.

MSK / Saravana said...

Wow. :)

Pixmonk said...

சுருக்க‌மாவும் அழகாவும் சொன்ன‌து ந‌ல்லாயிருக்கு.

நளன் said...

:-))

awesome.