Monday, December 21, 2009

தடையங்கள்



எப்படி தேடினாலும் கிடைப்பதில்லை சில தடயங்கள்.

காய்ந்த சருகுக்குவியலின் மேல்
சற்றுமுன் ஒரு இலை உதிர்ந்ததற்கோ

பூட்டிய பூங்காவின் ஊஞ்சல்களில்
குழந்தைகள் ஆடிவிட்டு போனதற்கோ

குறுஞ்செய்திகளில் தகித்து கழிந்த
மிரட்சியான இரவுகளுக்கோ

பின் அட்டை தெரிய கிடக்கும்
இப்புத்தகத்தை வாசித்து முடித்ததற்கோ

அடைக்கபட்டிருக்கும் கதவுகளேல்லாம்
முன்னெப்போதோ
விலாசமாய் திறக்கப்பட்டிருந்ததற்கோ

எந்த தடையங்களும் இருப்பதில்லை.

இருந்தும் அழிக்கவியலாமல் தேங்கிவிடுகின்றன

சில நினைவுகள்
சில தேதிகள்
சில குற்றவுணர்வுகள்

13 comments:

மணிஜி said...

நல்லாயிருக்கு அனிதா..

காயத்ரி சித்தார்த் said...

கவிதை அருமை :)

hiuhiuw said...

எவ்ளோ நாளாச்சு !

நேசமித்ரன் said...

எப்போதும் போல் வசீகரிக்கும் எழுத்து

butterfly Surya said...

Welcome back..

வழக்கம் போல் அருமை.

சென்ஷி said...

சூப்பருங்க... ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குது.

Anitha Jayakumar said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!!

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.

அரங்கப்பெருமாள் said...

அருமையானக் கவிதை.

மோட்டார் சுந்தரம்பிள்ளை said...

நல்லாயிருக்குங்க

தடயங்கள்னு முதல் வரில எழுதியிருக்கீங்க
கடைசி வரில தடையங்கள்னு இருக்கு தடயங்கள்தான் சரின்னு நினைக்கிறேன்.

அடைக்கப்பட்டிருக்கும் கதவுகளெல்லாம்
முன்னெப்போதோ
விலாசமாய் திறக்கப்பட்டிருந்ததற்கோ

சின்ன எழுத்துப்பிழை டைப்பிங்கல பார்க்காம விட்டிருபீங்களாயிருக்கும்.

சில தேதி சில நினைவுகள்

நல்லாயிருக்குங்க

ரௌத்ரன் said...

ரொம்ப நல்லாயிருக்கு கவிதை..எழுத்து பிழைகள் கொஞ்சம் உறுத்துது.கேசரியில் கல் உப்பு :)

ரோகிணிசிவா said...

சில தேதி சில நினைவுகள் -etrukola vendiya, anal velziyil sola mudiyatha unarvugal!

MSK / Saravana said...

பயமா இருக்கு.
கவிதை ரொம்ப நல்லா இருக்கு.