Wednesday, December 30, 2009

ஒரு நடிகர் இறந்துவிட்டார்




ஊரே புரண்டுகிடக்கிறது
ஆங்காங்கே வாகனங்கள் எரிகின்றன‌
தொலைகாட்சியில்
அவர் திரைப்படங்கள் மட்டுமே
ஒளிபரப்புகிறார்கள்
கடைகளின் மேல் கல்லெறிகிறார்கள்
பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாயிற்று

துக்கம் அனுஷ்டித்தபடி
அலுவலகம் செல்ல வேண்டி
வாகனத்தின் கைப்பிடியில் கட்ட
ஒரு கறுப்பு காலுறையை
தேடிக்கொண்டிருக்கிறேன்

கிடைத்தப்பாடில்லை.

18 comments:

Anonymous said...

good one :) எறிகின்றன
china ri varumoo

உண்மைத்தமிழன் said...

நன்று..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/வாகனங்கள் எறிகின்றன/

எரிகின்றன?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை பிடித்திருக்கிறது. சொல்ல மறந்து போனது :)

Ganesan said...

நிதர்சனமான உண்மை

இராஜ ப்ரியன் said...

good one ...

நேசமித்ரன் said...

எறிகின்றன ?

Anitha Jayakumar said...

எரிகின்றன.. மாற்றிவிட்டேன். :) நண்பர்களுக்கு நன்றி.

butterfly Surya said...

துக்கத்திலும் தூக்கத்திலும் கவிதையா..

நிதர்சனம் அனிதா.

நந்தாகுமாரன் said...

அட வெளிப்பாடு நல்லா இருக்கே

அண்ணாமலையான் said...

ரசிகனுங்க யாரும் ப்ளாக் படிக்க மாட்டாங்கன்ற தைரியமா?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

திருவாரூர் சரவணா said...

கூகிள் எர்த் மூலமா தெளிவா படம் பிடிச்சு இந்த மாதிரி அசம்பாவிதம் செயுரவங்களை பிடிச்சு பத்து வருஷம் உள்ள போட்டா எல்லாம் சரியாயிடும்.

Anitha Jayakumar said...

நன்றி சூர்யா..
நன்றி நந்தா..
நன்றி ரவி..
அண்ணாமலையான்.. இப்போ வரைக்கும் எந்த தாக்குதலும் நடத்தலை.. :)
சரண்.. ஐ ஜி கார் மேலயே நேருக்கு நேரா நின்னு கல் அடிக்கறாங்க.. கூகள் எர்த் என்ன செய்யும் பாவம்..

ஜீவன்சிவம் said...

யதார்த்தமான வரிகள்...

நன்றி

MSK / Saravana said...

டைமிங்கா கவிதையா!! ரொம்ப நல்லா இருக்கு.. :)

Pixmonk said...

ரொம்ப‌ நேர்த்தியான‌ வ‌ரிக‌ள்

கமலேஷ் said...

உங்களின் எல்லா கவிதைகளும் மிக ஆழமாகவும் அழகாகவும் உள்ளது...வாழ்த்துக்கள்...