Monday, January 09, 2012

வேறாயினும்.




ஆகாத வேளை தான் இது

நடந்தவை எதுவுமே நடக்கவேயில்லையென
நம்பிக்கொள்கிறோம்.

நாம் மனிதர்கள் கூட இல்லை.
கேரட் தோட்டத்தில் விளையாடும் முயல்கள்
அல்லது பெருங்கடலோரத்து சிறு ஆமைகள்

நீந்தி ஊர்ந்து மணல் தின்று
மரணித்துவிடுவதன் பயங்களற்று
இலக்குகளின்றி அலைகிறோம்
தெளிந்த நீரில் விரல் அமிழ்த்தி
சுருங்கும்வரை காத்திருக்கிறோம்
கால் இடறும் எல்லைகளை
வசதிக்கேற்றபடி தள்ளிவைக்கிறோம்

எல்லா நேரங்களிலும்
நடந்தவை எதுவுமே நடக்கவேயில்லையென
நம்பிக்கொள்கிறோம்.

இருந்தும் நிகழ்பொழுதில்
சொல்லிவைத்தாற்போல அப்பிக்கொள்கிறது
கண்கள் பழகிக்கொள்ளவே முடியாத பேரிருட்டு.

-அனிதா

7 comments:

Unknown said...

நாம் மனிதர்கள் கூட இல்லை.
கேரட் தோட்டத்தில் விளையாடும் முயல்கள்
அல்லது பெருங்கடலோரத்து சிறு ஆமைகள்//
தெளிந்த நீரில் விரல் அமிழ்த்தி
சுருங்கும்வரை காத்திருக்கிறோம்//

nallayirukku.

ராஜா சந்திரசேகர் said...

அனிதா ஒரு மெல்லிய அழகு உங்கள் கவிதையில் இழையோடுவது நான் ரசிக்கும் ஒன்று.வேறாயினும் மேலும் அதை அதிகமாக்கியது.

மோட்டார் சுந்தரம்பிள்ளை said...

இந்த கவிதை ரொம்ப அழகா வந்திருக்குங்க

Muthasen Kanna said...

nalla kavidhai... :)

Muthasen Kanna said...

Super nga.. Nalla irukku

MSK / Saravana said...

செம..

//நீந்தி ஊர்ந்து மணல் தின்று
மரணித்துவிடுவதன் பயங்களற்று
இலக்குகளின்றி அலைகிறோம்
தெளிந்த நீரில் விரல் அமிழ்த்தி
சுருங்கும்வரை காத்திருக்கிறோம்//

இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.. :)

Deekshanya said...

romba nalla irunthichu kavithai. vaalthukkal. nalla sinthanai,
priyamudan
Anitha