Friday, November 03, 2006

வறண்ட பகல்களும் உறைந்த இரவுகளும்

கதவும் ஜன்னலும் மூடியே கிடக்கும்.
பழகிவிட்ட இருளில்
சுவர் மூலைகளின்
ஒட்டடை எடுக்கிறேன்
கால்களின் கீழே
அலை இழுக்கும் மணலாய்
உயிர் குறுகுறுக்கும்
தேனீர் அருந்தி நினைவு கலைக்கிறேன்
வெளிச்சமும் நிறங்களும்
மூளைக்குள் வேர் விட்டுப் படரும்
சிதறிய எண்ணங்கள் சேர்க்கச் சேர்க்க சிதறும்
காத்திருக்கும் காகங்கள்
மோகத்தோடே அலறும்
வியர்வை கசகசப்பும்
பழகமறுக்கும் தனிமையும்
மரபு மீறியும் சாவி தேடும்.
வெளியேற மறுக்க வலிமை சேர்க்கிறேன்
உனக்காய் என்னுள் குறுகிக் கிடக்கிறேன்
இன்றொரு பொழுது இனிதே கழிந்தது
இனி நாளையும்...

-அனிதா

9 comments:

Anonymous said...

kavithai super anitha, un varungalla kanavar romba kuduthu vaithavar, anithavuku oru OHHHH...

-ganeshkj said...

After reading this kavidhai, I felt you have reached your perfection in writing kavidhai. Choice of words - strong and matured.

என்னை surprise செய்த வரிகள் -
"வெளிச்சமும் நிறங்களும்
மூளைக்குள் வேர் விட்டுப் படரும்"

"கால்களின் கீழே
அலை இழுக்கும் மணலாய்"

"சிதறிய எண்ணங்கள் சேர்க்கச் சேர்க்க சிதறும்"

கொஞ்சம் பயத்தோடு யோசிக்க வைத்த வரி -
"காத்திருக்கும் காகங்கள்
மோகத்தோடே அலறும்"

AKV said...

This is undoubtedly the best among the ones you had given in your blog.. Looks like you are becoming more matured in finding the words and putting them together in a coherent way..

Ippadi "veliyaera marrukkavum", "kurigi kidaappathum", "thanimai" yai yum yedharkaga, yaarukaga, yaen sakitthu kolla vaendum ?. Is it really needed ?. Does it make sense ?.

Suthanthira paravaiyai adhae samayam marabaiyum meeramal yaen vaazha katru kolla koodathu ?

Vaa.Manikandan said...

அனிதா,

நான் சொல்ல விரும்பியதை ஏற்கனவே நண்பர்கள் சொல்லிவிட்டார்கள்.

தங்களின் கவிதைக்கான வடிவம் வியபேற்படுத்தக் கூடியதாகவும், சொற்கள் செறிவு மிக்கனவாகவும் மாறி வருகின்றன.. வாழ்த்துக்கள்.

செய்திகளை மிக ஆழமான பகுதியில் புதைத்து விடுகிறீர்கள் என உணர்கிறேன். வாசகன் தாண்டி சென்று விடக் கூடிய வாய்ப்பு அதிகம். :)

Anonymous said...

அன்பிற்கினிய அனிதா

ருசியாக உணவு
உண்டேன்
ஆனால்
சரிக்கவில்லை

அழகிய கவிதை
ஆனால்
இந்த
சாதாரணனுக்கு
புரியவில்லை!

என்ன தான்
சொல்ல வருகிறீர்கள்

தெளிவில்லையேல்
ஒவ்வொருவருக்கு
வேறு வேறு அர்த்தம்
தோன்ற - நீங்கள்
எதிர்பார்த்த செய்தியை
சொல்லுமோ
கவிதையில் மறைத்தவை

nsureshchennai@gmail.com

பாசமுடன்
என் சுரேஷ்

பழனி said...

அனிதா அவர்களுக்கு,

இக்கவிதையில் சொற்க்களின் தேர்வு அருமை .... நான் மிகவும் ரசித்த வரிகள் ...

"வெளிச்சமும் நிறங்களும்
மூளைக்குள் வேர் விட்டுப் படரும்"

"கால்களின் கீழே
அலை இழுக்கும் மணலாய்"

"சிதறிய எண்ணங்கள் சேர்க்கச் சேர்க்க சிதறும்"

"உனக்காய் என்னுள் குறுகிக் கிடக்கிறேன்" ...

ஆனால் ... சுரேஷ் அண்ணன் சொன்னது போல் ... கவிதையின் அர்த்தம் மட்டும் நிழலாகவே தெரிகிறது ... கவிதையின் அர்த்தம் அடியென்னுக்கு புரியவில்லை ... புரிந்தால் மிகவும் ரசிப்பேன் ...

தோழமையுடன்,
./பழனி

Anitha Jayakumar said...

Hi Friends...

கவிதை படிக்க நேரம் ஒதுக்கியதர்க்கு நன்றி...

தேவைகள் இருந்தும், அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும், மரபின் எல்லை மீறாமல் ஒருவனுக்காக மட்டுமே காத்திருக்க முயலும் பெண்மை பற்றி எழுத முயன்றுள்ளேன்...

சாத்வீகன் said...

காதல் தோல்வியின் கவிதை என்று நினைத்தேன்..
பொறுத்திருக்கும் பெண்மையென அறிந்தபின்
மேலும் நன்று...

தமிழ்நதி said...

அனிதா,

இந்தக் கவிதையில் சொற்தெரிவும் செறிவும் நேர்த்தி. அற்புதமாக எழுதுகிறீர்கள். எங்கிருக்கிறீர்கள் நீங்கள்… உங்கள் கவிதைகளை இத்தனை நாள் தவறவிட்டுவிட்டேனே என்றெண்ணத் தூண்டிய வரிகள் உங்களுடையவை.