Friday, November 17, 2006

கோள்களின் நிழல்கள்

நினைவிருக்கிறதா உனக்கு?

பின்னோக்கிய யுகங்களின்
ஒரு பிரபஞ்ச வெளியில்
நம் முதல் சந்திப்பை

கிரகங்களின் இடுக்குகளில் அமர்ந்து
நூற்றாண்டுகளாய் தொடர்ந்த பேச்சுக்களை
இரண்டாவது பால் வீதி முனையின்
விருப்பமில்லா விடைபெறுதல்களை

தேகங்கள் மாறி மாறி நுழைந்தும்
சலிக்காத கண்ணாமூச்சிகளை
பிறந்ததுமே தேடத் துவங்குகிறேன்
உன்னை ஒவ்வொரு முறையும். இம்முறையும்.

ஜனனங்கள் பலவாகி ரேகைகள் மாறினும்
இப்பொழுதும் அடயாளத்திற்க்கு உதவும்
உன்னுள் படிந்த என் மோகங்களும்
என்னுள் பரவிய உன் வெட்கங்களும்

-அனிதா

நன்றி : ஆனந்த விகடன்

2 comments:

sooryakumar said...

மிக நன்றாக இருக்கிறது.புதிய கற்பனையுடன்..காதலின் வலியும் இருக்கிறது. ம்..ம்...தொடருங்கள்.

கருப்பு said...

கிரகங்கள் என்ன, பிரபஞ்சங்கள் என்ன, கோள்கள் என்ன... எத்தனை பிறப்பாக இருந்தாலும் என்ன.... காதல் உண்மையானது. ஆழமானது.. நிச்சயம் துரத்திச் சென்று வெல்லும்... வெல்ல வேண்டும்.