Wednesday, November 29, 2006

வழியும் வெறுமைகள்

சுடுமணற்பாலையில்
வானம் பார்த்து படுத்திருக்கிறேன்
சீரான புற்பரப்பை விடவும்
பூக்கள் நிறைந்த வனங்களை விடவும்
நிரந்தரமானவை பாலைகள்
விரல் வழி வெம்மை உணர்ந்தபடி
கரிப்பேறிய கோடுகளோடு பயணிக்கிறேன்
தோல் வெடித்து
கசியத்துவங்கிய ரத்தத்தின் நெடி
வெளியெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது
திசைகளற்ற மணற்பரப்பில்
திசைத்திருப்ப ஒன்றுமில்லை.
நிகழவே இயலாத ஏதோ ஒன்றுக்காய்
நொடிகளை நிறுத்தி காத்திருக்கிறேன்
மேடுகள் அழிந்து மேடுகள் உருவானபடி இருக்க
நீ வரவேயில்லை
இதயங்களின் கதகதப்பில் அடைகாக்கபடும்
என் கவிதைகளின் முதல் வாசகனுக்கு
என்னை எப்போதும் புரியபோவதில்லை

7 comments:

Ken said...

"பூக்கள் நிறைந்த வனங்களை விடவும்
நிரந்தரமானவை பாலைகள்
விரல் வழி வெம்மை உணர்ந்தபடி
கரிப்பேறிய கோடுகளோடு பயணிக்கிறேன்"
திரு அனிதா, உங்களின் கவிதை நடையும் வீரியமிக்க வார்த்தைகளும் வெகு அருமை
பாராட்டுக்கள்
- கென் -

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப வலிக்கும் வரிகள்.

-ganeshkj said...

எழுதக் காத்திருப்பதைவிட எழுதியதைச் சரியாக புரிந்துகொள்ள கூடிய வாசகனுக்காக அதிகம் காத்திருக்க வேண்டியிருக்கிறது, நம்பிக்கையோடு.

"கரிப்பேறிய கோடுகள்" என்ற வார்த்தைப் பிரயோகம் அட! என்று சொல்ல வைத்தது.

Anonymous said...

அனிதா,

வெறுமையை ஆழமாக அனுபவிக்க முடிகிறது உங்கள் கவிதையில்.ஆனால்,மன்னிக்கவும்,எனக்கு ஒரு சந்தேகம்.. புரிந்து கொள்ளும் முதல் வாசகனுக்கான காத்திருப்பு இப்படிப்பட்ட வெறுமையைத் தருமா ?

கருப்பு said...

காத்திருங்கள் காத்திருங்கள்.

புரிந்துகொள்ளக் கூடிய வாசகர்கள் நிறைய வருவர்..

என்னைப் போலவே...

BASHA said...

azagaaana kavithai

MSK / Saravana said...

மிக அருமை.. ஆழம் பொதிந்த வார்த்தைகள்..