முத்தங்களாலான கூட்டின் வெம்மைக்குள் சரிந்திருக்கிறேன்
திரைச்சீலை இடுக்கிலிருந்து
முகத்தில் கசியும் அவசர வெளிச்சங்களையும்
பின்னிருக்கை பெண்ணின் வளையல் கனைப்புகளையும்
பொருட்படுத்த நேரமில்லை இப்போது
என் நாசிக்குள் புகுந்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் அடர்த்தியில்
உள்ளங்கையின் நோக்கங்களை தொடர்ந்துபோக
சிரமமாகிவிடுகிறது ஒவ்வொரு முறையும்.
உன் கைக்குள் சுருங்கிகொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக்கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கி பயணித்துப் பின்
வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன
வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேக தடைகளும்.
-அனிதா
4 comments:
முத்தக்காடு என்ற தலைப்பை விட முத்தப்பயணம் என்பது சரியாயிருக்குமென நினைக்கிறேன்.
நல்ல கவிதை அனிதா!
இந்த subject-ல் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய பரிட்சயங்களால் கவிதையை வெகுவாகவே இரசிக்க முடிந்தது அனிதா !! :)))
ம்ம்ம் நல்லா இருக்கு
Post a Comment