Monday, October 22, 2007

பத்மப்ரியாவும் சாமியும்.

ஜூனியர் விகடனில் இதைப் பற்றி வாசிக்கும் வரை ஏதோ டைரக்டர் நடிகையை அறைந்த விவகாரம் என்று நினைதிருந்தேன்.
பிறகு தான் வேறு சில விஷயங்களும் தெரிய வந்தன..

டைரக்டர் சாமி மீதான பத்மப்ரியாவின் பாலியல் புகாருக்கு சாமி இப்படி பதிலளித்திருக்கிறார்: "பத்மப்ரியாவை கேமரா க்ளோஸப் பில் பார்த்தபோது அவருக்கு மேலுதட்டிலும் தாடையிலும் ரோமங்கள் இருந்தன. நான் ஷேவ் செய்துகொண்டு வரும்படி சொன்னேன். இப்படி ஆம்பளை போல இருக்கும் பெண்ணை பார்த்தால் எனக்கு செக்ஸ் உணர்ச்சி எதுவும் வரவில்லை" என்கிறார்.

இயக்குனர் சாமிக்கும் இன்னும் இது பற்றி தெரியாத மற்ற ஆசாமிகளுக்கும் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இன்று பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் பூனை முடிகள் இருப்பது வெகு இயல்பாகி விட்டது. இதை பரிணாம வளர்ச்சி என்றோ, மரபு, ஹார்மோன், வாழ்க்கை முறை, இன்னும் என்ன வேண்டுமானாலும் ஆராயட்டும், முகத்தில் முடி இல்லாத பெண்கள் பார்ப்பது மிக அரிது.

பெண்களுக்கு சில காலம் முன்பு வரை இது பெரும் கூச்சமாகவும் ஏன் குற்ற உணர்ச்சியாகவும் (!) கூட இருந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை. தோழிகளுடன் பேசி, அச்சம், குழப்பங்கள் நீங்கி தெளிவாகி வருகிறார்கள். அழகு நிலையங்களில் நிறைய பிஸினஸ் ஆவது த்ரெட்டிங் (threading) என்னும் முகத்தில் ரோமங்கள் அகற்றும் முறையால் தான். புருவம் திருத்துவதும் இந்த முறையில் தான். ஆபத்தில்லாத, பக்க விளைவுகள் இல்லாத, சீக்கிரம் அகற்ற முடிந்த வழி. இரெண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ, மாதமொருமுறையோ செய்து கொள்கிறார்கள். இது தவிர வேக்ஸிங் (waxing), எலெக்ட்ராலஸிஸ் (electrolysis), லேஸர் (laser) என்று மற்ற வழிகளும் உள்ளன. அவரவர் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்றைய நவீன யுகத்தில் இதற்கெல்லாம் வெட்கப்பட தேவையோ, நேரமோ இல்லை.

மகிழ்வான விஷயம் என்னவென்றால் ஆண்களும் இதையெல்லாம் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வது தான். கூட பணிபுரியும் பெண்களையோ, அம்மா மற்றும் சகோதரிகளையோ தினமும் பார்ப்பவர்கள், இது எத்தனை சாதாரணம் என்று கவனித்திருக்கலாம். யாரும் "நீ ஷேவ் செய்யலையா இன்னிக்கு" என்று (நகைச்சுவைக்கு கூட) கேட்பதில்லை. முகத்தில் முடி இருக்கும் பெண்களை காதலிப்பவர்களையும், கைக்குள் வைத்து தாங்கும் கணவர்களையும் பார்த்தபடி தான் இருக்கிறோம்.

பெண்கள் எப்படி இருப்பினும் அழகிகள் தான். மற்றபடி சாமியின் இந்த அருவருக்கதக்க எகத்தாளமான குற்றசாட்டு அவர் மனமுதிற்சியின் அளவை காட்டுகிறது. முகத்தில் முடி இருப்பது தான் அவர் செக்ஸ் உணர்ச்சிகளை தடுக்கவோ தூண்டவோ செய்யுமேயானால் அவர் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் நிறைய இருக்கிறது.

- அனிதா

5 comments:

இரண்டாம் சொக்கன்...! said...

சரியாச் சொன்னீங்க அனிதா...

அப்புறம்...கவிதா...அணில்குட்டி...இப்படி யாரையாவது உங்களுக்கு தெரியுமா?

ஆடுமாடு said...

முதலில் ஒரு விஷயம். பத்மப்ரியா ஒரு போதும் பாலியல் குற்றச்சாட்டை சொல்லவில்லை. அதை பத்திரிகைகளாகவே எழுதி கொண்டன. இயக்குனர் சாமிக்கு வேறுமாதிரியான கோபம். அதை இப்படிக்காட்டுமிராண்டித்தனாம காண்பித்திருக்கிறார்.
ஆடுமாடு

Anonymous said...

//முதலில் ஒரு விஷயம். பத்மப்ரியா ஒரு போதும் பாலியல் குற்றச்சாட்டை சொல்லவில்லை. அதை பத்திரிகைகளாகவே எழுதி கொண்டன.//

உங்களுக்குக் பாலியல் தொந்தரவு கொடுத்தாரா என்ற கேள்விக்கு அதை வெளியில் சொல்ல முடியாது என்று பத்மப்பிரியா பதிலளித்ததை சன் டிவியில் காட்டியது பொய்யா?

Anonymous said...

//இன்று பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் பூனை முடிகள் இருப்பது வெகு இயல்பாகி விட்டது. இதை பரிணாம வளர்ச்சி என்றோ, மரபு, ஹார்மோன், வாழ்க்கை முறை, இன்னும் என்ன வேண்டுமானாலும் ஆராயட்டும், முகத்தில் முடி இல்லாத பெண்கள் பார்ப்பது மிக அரிது.

பெண்களுக்கு சில காலம் முன்பு வரை இது பெரும் கூச்சமாகவும் ஏன் குற்ற உணர்ச்சியாகவும் (!) கூட இருந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை.//

மலையாளத் திரையுலகம் போல இயல்பாக இருக்கட்டும் என்று பத்மப்பிரியா நினைத்துவிட்டாரோ என்னமோ?

தமிழ் திரையுலகம் நடிகைகளிடம் என்ன எதிர்பார்க்கிறது என்று அவருக்குத் தெரியாதது வியப்பே?

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

Migavum thelivaana, azhuththamaana pathivu! thodarattum.... paravattum... thangkal paarvai!